இரண்டு நாட்களாக இணையத்தில் ஒரே அக்கப் போர்!!!போர்சுகலின் நாயகன் ரொணால்டோ, போட்டிக்கு பிந்தைய தொலைகாட்சி நேர்காணலின் போது...Coke பாட்டிலை அகற் ஒரு "புரட்சியை" ஏற்படுத்தினார். புரட்சியின் உடனடி பலன், அய்ரோப்பா ஒன்றியத்தில் Coca-Cola கம்பெனியின் சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி.
ரொணால்டோ செய்தது சரியா இல்லை ஒரு கவன ஈர்ப்பு யுக்தியா என்பதும், அதன் விளைவாக இனி இது போன்ற காரியங்களில் வீரர்கள் ஈடுபடக் கூடாது என்கிற போட்டி நிர்வாக உத்தரவும் தனிக் கதை.
ஆனால், இங்கு சிலர், திடீர் பொருளாதார வல்லுனர்களாகி, Coca Cola கம்பெனியின் எதிர்காலம் பற்றி கவலைப் படுவதும், அவருக்கு இருக்கும் "ஆண்மை" இங்கு யாருக்காவது உள்ளதா என கம்பு சுத்தவதும் வேடிக்கை.
ஒரு நிறுவனம் அல்லது பிராண்டின் சந்தை மதிப்பு என்பது, அதனை வெளியாட்களுக்கு விற்கும் போது மட்டுமே பயன் படும். உண்மையான கேள்வி, இந்த புரட்சியின் விளைவாக எத்தனை பேர், கோக் குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் (நிறுவனம் சார்ந்தது), எத்தனை பேர் கோக் மற்றும் பெப்ஸி போன்ற எல்லாவற்றையும் நிறுத்தி விட்டார்கள் (பொதுவாக உடல் நிலை சார்ந்தது, விழிப்புணர்வு நல்லதே!) என்பதே பேசு பொருளாக இருக்க வேண்டும்.
இந்தியாவில் இதனைப் பற்றி பெருமை பேசும் எத்தனை பேர், இந்திய தேசிய விளையாட்டின் (தேசிய விளையாட்டு என்று ஒன்றும் இல்லாத காரணத்தால் தானே சுயம்புவாக அறிவித்துக் கொண்ட கிரிக்கெட்) கடவுளான சச்சின், புகையிலை மற்றும் சாராயத்திற்கு விளம்பர தூதராக மாட்டேன் என்று உறுதி பூண்டு சத்தியம் செய்ததைக் கண்டு, அதனை தவிர்த்திருக்கிறார்கள் ?
ஒருவரும் இல்லை. மாறாக குளு குளு பார் வெளியே, ஒரு கையில் மதுக் கோப்பையுடனும், மறு கையில் வெறுமே புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டுடனும், "வாவ்....சச்சின் கிரேட் யார்...." என்று பெருமைப் படுவதுமே வாடிக்கை. வழமை போல காலையில் மறந்துவிட்டு, மீண்டும் அது போன்ற ஒரு உரையாடலுக்கு காத்துக் கொண்டிருப்பார்கள்.
(யாரோ என் சிந்தனையை கலைக்கும் விதமாக - அந்த கால சிவாஜி, பின்னர் வந்த ரஜினியைப் பார்த்து தம் அடிக்க ஆரம்பிச்சவங்க பத்தி என்ன சொல்ற ? - என்று என் காதில் ஓதுகிறார்கள். அவர்களுக்கு ஈரேழு ஜன்மும் - இப்போது இருப்பவரே வாழ்க்கை துணையாக வரும் வரம் எனும் சாபம் பெற கடவுவார்களாக.)
உண்மை நிலை என்ன ? இங்கு விளம்பரம் மட்டுமே Omnipotent. விளம்பர தூதர்கள் இல்லை.
80களில், ஞாயிறு மதியம் வானொலியில் ஒலிபரப்பாகும் சுசித்ராவின் குடும்பம் நிகச்சிக்கு ஏகப்பட்ட விசிறிகள். அதற்காகவே ஹார்லிக்ஸ் வாங்கியவர்களும் உண்டு. ஆனால் இன்று ? ஹார்லிக்ஸுக்குப் போட்டியாக பல பானங்கள். வேடிக்கை என்னவெண்றால், ஒரே பானம் உடலில் கொழுப்பை கூட்ட ஒன்று, குறைக்க ஒன்று, அக்காவுக்கு ஒன்று, அவர் அம்மா ஆனதும் ஒன்று அவரே பாட்டி ஆனதும் ஒன்று என பல வெரைட்டிகள். சுவையில் எந்த மாற்றமும் இருக்காது என்பது திண்ணம்.
இப்படி மகுடி வைத்து நம்மை வசியம் செய்து கொண்டிருப்பவர்கள் சுற்றி இருக்க, நாம் என்னவோ ரொணால்டோவைப் பார்த்து பேஷ் பேஷ் என்கிறோம்.
சரியான காமெடி பீஸ்....
பிகு : அது சரி, நயன் பத்தி ஒன்னும் சொல்லலியே என்று குழம்புவர்களுக்கு....அந்த படம்....ச்சும்மா...ஒரு விளம்பரதுக்காக...ஹிஹி...